புதன், 17 மே, 2023

கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சித்தராமையா : காங்கிரஸ் முடிவு - சனிக்கிழமை பதவியேற்பு.!

 

தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களுக்குப் பிறகு கடைசியாக முதல்வர் பதவி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். அதிகாரம் ஏற்க முன்வந்தது, DK சிவக்குமார் துணை முதல்வராக சம்மதித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன..

சனிக்கிழமை பெங்களூர் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், சித்தராமையா மற்றும் DK சிவக்குமார் உடன் இணைந்து கலந்து கொள்ளவுள்ளார். 

காந்தி ஸ்டேடியம் முன்பு இரண்டாவது முறையாக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள் என்று ஃப்ளெக்ஸ்களில் பேனர்களில் வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - புளோரிடாவில் கார் மோதியதில் இந்தியர் உயிரிழப்பு.!

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கார் மோதியதில் 32 வயது இந்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அமெரிக்காவில் கார் மோதியதில் 32 வயது இந்தியர் உயிரிழந்தார். HCL டெக்னாலஜிஸில் டெஸ்ட் முன்னணியில் பணியாற்றிய மாரியப்பன் சுப்ரமணியன், அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, திங்கட்கிழமை தம்பாவில் உள்ள ஹில்ஸ்பரோ கவுண்டியில் காலமானார். மாரியப்பனுக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.




செவ்வாய், 16 மே, 2023

சென்னை - புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழப்பு.!

 

புழல் அருகே காவாங்கரையில் உள்ள கொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பாஸ்கரன் (52), இஸ்மாயில் (36) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உயிரிழந்தனர்.

சென்னை: புழல் அருகே வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இருவர், நச்சுப் புகையை சுவாசித்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தொட்டிக்குள் செல்லாத மேலும் ஒருவர் பாதுகாப்பாக உள்ளார்.

அவர்கள் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அணிந்திருக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் 3 பேரும் குருசாந்தி நகரை சேர்ந்த நிர்மலா என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.






சென்னை - வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.!

 

வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம்

கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்

ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாஜக நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி - ! விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது..!!

 


விருதுநகர்: ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட தலைவர் சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசியைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகியான பாண்டியன் என்பவரது மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. துறைமுகம் அல்லது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017ம் ஆண்டில் சுரேஷ், கலையரசன் சேர்ந்து பாண்டியனிடம் ரூ. 11 லட்சம் பெற்றுள்ளனர்.ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பாண்டியனுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் புகார் அளித்தார். பாண்டியனின் புகாரை விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ் கடந்த டிசம்பர் மாதம் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாஜக மாவட்ட தலைவரான சுரேஷுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி இருந்தது.


இந்நிலையில், முன்ஜாமின் நிபந்தனைபடி பணத்தை திருப்பிக்கொடுக்காமல் சுரேஷ் ஏமாற்றியதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்த சுரேஷை விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

மின்சார விநியோகம் -தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு.!

 

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கான மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு ஒன்றிய அரசு பாராட்டு கடிதம்!

2018-19-ல் தேசிய அளவில் நாள் ஒன்றுக்கு 21.10 மணி நேரமாக ஊரக மின் விநியோகம் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 22.15 மணி நேரம் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது!