சனி, 8 ஜூன், 2024

தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - ரூ 904 கோடியில் அமைக்க டெண்டர் கோரியது சிப்காட் நிறுவனம்.!

 

தூத்துக்குடியில் முதல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் ரூ.904 கோடியில் டெண்டர் அமைக்க கோரியது சிப்காட் நிறுவனம்; நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்க டெண்டர்

மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கடந்த வருடம் அறிவித்திருந்த நிலையில் டெண்டர் அரிவிப்பு வெளியீடு

வெள்ளி, 7 ஜூன், 2024

சூறைக்காற்று -மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.!

இன்று(ஜூன்.7) குமரிக்கடல் பகுதி, மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், கேரளா-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.!

 

#NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன.

இவை, தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.

மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம்:

🎯நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை.

🎯அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை.

🎯 சமூகநீதிக்கு எதிரானவை.

🎯 தேவையுள்ள இடங்களில் மருத்துவர்களின் இருப்பை பாதிப்பவை.

#NEET எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்! நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! என தெரிவித்துள்ளார்.

வியாழன், 6 ஜூன், 2024

கன்னியாகுமரியில் அங்கீகாரமின்றி செயல்படும் 57 தனியார் பள்ளிகள்; மாணவர்களை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 57 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ் செயல்படும் GKV CBSE பள்ளி, குறிஞ்சி நகர், புத்தேரி, IELC CBSE பள்ளி, நாகர்கோவில், மேரி மௌண்ட் CBSE பள்ளி, அணக்கரை, அருவிக்கரை, ஆதர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, வெங்கஞ்சி புனித அலோசியஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சாயக்காரன்பரப்புவிளை, லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, சர்குணவீதி, ராமவர்மபுரம், நாகர்கோவில், லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, ஜோஸ்வா தெரு, நாகர்கோவில், ஶ்ரீ கிருஷ்ணா இளம் மழலையர் பள்ளி, குருகுலம் குடோஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார் காலனி, I Play I Learn இளம் மழலையர் பள்ளி, ராமவர்மகரம், நாகர்கோவில், Braino Brain மழலையர் பள்ளி, ராமன்புதூர், நாகர்கோவில் Merry Poppins மழலையர் பள்ளி, ராமவர்மபுரம், நாகர்கோவில், Gingle Kids மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில், Shining Champions மழலையர் பள்ளி, நாகர்கோவில், Jolly Kids மழலையர் பள்ளி, பெருவிளை, The Presidency Montessori மழலையர் பள்ளி, நாகர்கோவில், Geo Kids Creative மழலையர் பள்ளி மூத்தருன்னி, அழகன்பாறை, மணவாளக்குறிச்சி ரோடு, திங்கள்நகர், Honeybee மழலையர் பள்ளி, வடக்கு தேரிவிளை, புத்தளம்,  St.Annes Kids School, கிறிஸ்துராஜா கோவில், நெடுவிளை, காளிமார், CK Kids இளம் மழலையல் பள்ளி, இராஜாக்கமங்கலம், Kirathoor Kidzee இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர், Olive இளம் மழலையர் பள்ளி களியல் ரோடு, அருமனை, Kidzee இளம் மழலையர் பள்ளி, பைங்குளம், புதுக்கடை, Labai Kidzee இளம் மழலையர் பள்ளி, மயிலோடு, தக்கலை, London Kids இளம் மழலையர் பள்ளி, கருங்கல், Little Millenium இளம் மழலையர் பள்ளி, கருங்கல், லிட்டில் பட்ஸ் இளம் மழலையர் பள்ளி, ஆண்டித்தோப்பு, ராக் பெல்லர் இளம் மழலையர் பள்ளி, இறச்சகுளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அழகப்பபுரம், அல்போன்சா இளம் மழலையர் பள்ளி, AR Camp ரோடு, நாகர்கோவில், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கற்காடு கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, சற்குணவீதி, கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, மூவேந்தர் நகர், விங்ஸ் கிண்டர் கார்டன் இளம் மழலையர் பள்ளி, சுவாமிநாதபுரம் ரோடு, ஒத்தபுளி, ஆர்ட்ஸ் அக்காடமி இளம் மழலையர் பள்ளி, குருசடி, சி.கே..கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார்காலனி, சர்வஜோதி இளம் மழலையர் பள்ளி, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில், தர்ஷா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், சையின் சாம்பியன் இளம் மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், செம்போர்ட் லிட்டில் ஸ்டார் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், ஹலோ கிட்ஸ் எலிற்றா இளம் மழலையர் பள்ளி, என்.ஜி.ஓ.காலனி, M.K. கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, தம்மத்துக்கோணம், கிறிஸ்து அரசர் இளம் மழலையர் பள்ளி, பாலப்பள்ளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அம்மாண்டிவிளை, பிம்ஸ் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, செக்காரவிளை, லண்டன் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கருமாவிளை, செயின்ட்ஜாண்ஸ் கெலக்ஸி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர், கிட்ஸ் வேலி இளம் மழலையர் பள்ளி, சூழால், மார்க்கிரிகேரியஸ் இளம் மழலையர் பள்ளி, அருமனை, எல்.எம்.எஸ். இளம் மழலையர் பள்ளி, ஞாறாம்விளை, ராணி சோசியல் வெல்பெர் இளம் மழலையர் பள்ளி, மாத்தார், செயின்ட் மைக்கேல் இளம் மழலையர் பள்ளி, காட்டாத்துறை, லண்டன் இன்டர்நேஷனல் இளம் மழலையர் பள்ளி, மேக்காமண்டபம், உமா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கண்டன்விளை, ஹேப்பி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, முத்தளக்குறிச்சி, TEDDY BEAR HEAVEN இளம் மழலையர் பள்ளி, பரைக்கோடு ஆகிய 57 பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றது. 

இப்பள்ளிகளுக்கு விளக்கம் கேட்பு அறிவிப்பு அறிக்கை (Show cause Notice) அனுப்பியும் நாளதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே RTE 2009- சட்டத்தின்படி எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் மாணவர்களின் நலன்கருதி 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.

புதன், 17 மே, 2023

கர்நாடகா : முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சித்தராமையா : காங்கிரஸ் முடிவு - சனிக்கிழமை பதவியேற்பு.!

 

தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்களுக்குப் பிறகு கடைசியாக முதல்வர் பதவி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா 2வது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். அதிகாரம் ஏற்க முன்வந்தது, DK சிவக்குமார் துணை முதல்வராக சம்மதித்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன..

சனிக்கிழமை பெங்களூர் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், சித்தராமையா மற்றும் DK சிவக்குமார் உடன் இணைந்து கலந்து கொள்ளவுள்ளார். 

காந்தி ஸ்டேடியம் முன்பு இரண்டாவது முறையாக பதவியேற்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள் என்று ஃப்ளெக்ஸ்களில் பேனர்களில் வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - புளோரிடாவில் கார் மோதியதில் இந்தியர் உயிரிழப்பு.!

 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் கார் மோதியதில் 32 வயது இந்தியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அமெரிக்காவில் கார் மோதியதில் 32 வயது இந்தியர் உயிரிழந்தார். HCL டெக்னாலஜிஸில் டெஸ்ட் முன்னணியில் பணியாற்றிய மாரியப்பன் சுப்ரமணியன், அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, திங்கட்கிழமை தம்பாவில் உள்ள ஹில்ஸ்பரோ கவுண்டியில் காலமானார். மாரியப்பனுக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.




செவ்வாய், 16 மே, 2023

சென்னை - புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழப்பு.!

 

புழல் அருகே காவாங்கரையில் உள்ள கொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பாஸ்கரன் (52), இஸ்மாயில் (36) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த உயிரிழந்தனர்.

சென்னை: புழல் அருகே வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இருவர், நச்சுப் புகையை சுவாசித்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தொட்டிக்குள் செல்லாத மேலும் ஒருவர் பாதுகாப்பாக உள்ளார்.

அவர்கள் பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அணிந்திருக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் 3 பேரும் குருசாந்தி நகரை சேர்ந்த நிர்மலா என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.






சென்னை - வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்.!

 

வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது

8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம்

கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!


அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38%-ஆக இருந்த அகவிலைப்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் 42%-ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்

ஒன்றிய அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாஜக நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி - ! விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது..!!

 


விருதுநகர்: ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில் மாவட்ட தலைவர் சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசியைச் சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகியான பாண்டியன் என்பவரது மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. துறைமுகம் அல்லது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கடந்த 2017ம் ஆண்டில் சுரேஷ், கலையரசன் சேர்ந்து பாண்டியனிடம் ரூ. 11 லட்சம் பெற்றுள்ளனர்.ஆனால் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பாண்டியனுக்கு ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் பாண்டியன் புகார் அளித்தார். பாண்டியனின் புகாரை விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ் கடந்த டிசம்பர் மாதம் கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பாஜக மாவட்ட தலைவரான சுரேஷுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி இருந்தது.


இந்நிலையில், முன்ஜாமின் நிபந்தனைபடி பணத்தை திருப்பிக்கொடுக்காமல் சுரேஷ் ஏமாற்றியதை அடுத்து அவரை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் இருந்த சுரேஷை விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.