வெள்ளி, 7 ஜூன், 2024

சூறைக்காற்று -மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.!

இன்று(ஜூன்.7) குமரிக்கடல் பகுதி, மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், கேரளா-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில்சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு